بسم
الله الرحمن الرحيم
புரட்சிகரமான கற்கை
நுட்பத்திற்கு,
THREE STAR POINT
Pioneers in Smart Tuition Strategy சாதுர்ய பயிற்சி வியூகத்தில் முன்னோடிகள்
|
எமது சமூக முன்னேற்றத்திற்கு அவசியமான,
ஓர் அரிய கல்வித்திட்டம்!
1. எமது AL மாணவர்களின் தற்போதைய நிலை
|
1. AL பரீட்ஷையில்
FAIL பண்ணுவோர் தொகை வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே
செல்கிறது.
உயிரியல் துறை: 32 %
FAIL.
கணிதத்துறை: 60 % FAIL
2.
PASS பண்ணினாலும், A எடுப்போர் மிகக்குறைவாகவே
இருக்கிறார்கள்:
பெளதீகம்: 97.8 % ஆனோரும்,
இரசாயனம்: 97.2 % ஆனோரும்,
உயிரியல்: 97.6 % ஆனோரும்,
கணிதம்: 96.4 % ஆனோரும் A எடுக்கத்தவறி
விடுகிறார்கள்.
3. பாடசாலையிலும் TUITION வகுப்புகளிலும் படித்து, தீவிர முயற்சி செய்தோரின் பரிதாப நிலை தான் இது! எனவே,
தற்போதைய TUITION வகுப்புகளின் பங்களிப்பு திருப்திகரமாக
இருக்கவில்லை.
4. புகழ்பெற்ற TUITION
MASTER களிடம் படித்தே இப்படி
FAIL ஆனால், அடுத்தகட்டமாக, வேறென்ன
செய்யலாம் என பெற்றோர் அறியாதிருக்கும் அவல நிலை.
5. தற்போதைய
TUITION வகுப்புகள் மாணவரின் திறமைக்கும்
வெற்றிக்கும் உத்தரவாதம் தருவதில்லை.
6. தற்போதைய TUITION வகுப்புகள், (பாடசாலையில்
படிப்பிக்கும் முறையிலேயே) மற்றுமொருமுறை அதே பாடங்களை நடத்துவதைத்
தவிர பெரிதாக எதுவும் செய்வதில்லை.
7. தற்போதைய TUITION ஆசிரியர்கள், ஒரு வாரத்திற்குரியதை
ஒரே நாளில், 6 மணிநேரம் தொடர்ச்சியாக கற்பிக்கிறார்கள்.
மாணவரின் மூளைச் செயற்திறன் பாதிப்படைவதை சற்றும் பொருட்படுத்தாமல்,
‘கடமை முடிந்தது’ என்று நடப்பது பொறுப்பற்ற
செயல் ஆகும்.
8. பெருந்தொகை மாணவர் பயிலும் TUITION வகுப்புகளில், பின் வரிசை மாணவர்களுக்கு, கரும் பலகை / வெண் பலகைகளில் எழுதுவது சரியாகத்தெரிவதில்லை.
9. மேலும், ஆசிரியர்களின்
விளக்கவுரைகள், பின் வரிசை மாணவர்களுக்கு சரியாகக் கேட்பதுமில்லை.
10. எமது மாணவர்களின் பெறுபேறுகள் தரமாக இல்லாததால், எமது சமூகத்திற்குக் கிடைக்கவேண்டிய,
விகிதாசார அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதி, ஏனைய சமூக மக்களுக்குப்போய்ச் சேர்கின்ற அவல நிலை.
11. TUITION வகுப்புகளின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரிக்கிறது. ஆனால்,
AL பரீட்ஷையில் FAIL பண்ணுவோர் தொகையும்
அதிகரிக்கிறதே! எனவே, எங்கோ தவறு நடக்கிறது
என்பதை மக்கள் அறியாதிருக்கிறார்கள்.
2. VISSON: எமது
நிறுவனமான THREE
STAR POINT உடைய கனவுகள்/எதிபார்ப்புகள்
|
1. எமது AL மாணவர்களை,
ஒருவரைக்கூட FAIL ஆகவிடாமல், DOCTOR
/ ENGINEER மற்றும் பட்டதாரிகளாக உருவாக்கவேண்டும்.
2. பட்டதாரிகள் அதிகரிப்பினைத்தொடர்ந்து, எமது சமூகம் அதிரடியாக, பெரும் முன்னேற்றத்தைக் கண்டு சாதனை படைக்க வேண்டும்.
3.
MISSON: எமது
நிறுவனமான THREE
STAR POINT உடைய செயற்திட்டம்
|
AL பரீட்ஷையில், அதிசிறந்த
(A A A) பெறுபேறு பெறமுடியும் என்பதை உறுதிசெய்யக்கூடிய ஒரு நிறுவனத்தை அமைத்து, மாணவர்களைப் பயிற்றுவித்தல்.
4. OUR STRATEGY: எமது
நிறுவனமான THREE
STAR POINT உடைய சில வழிமுறைகள்
|
1.
எமது செயற்திட்டத்தை வெற்றிபெறச்செய்யக்கூடியதும், இலங்கையில் வேறெங்கும் காணமுடியாததுமான, அற்புதமான கற்றல், கற்பித்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தல்.
2.
அதற்கான சுற்றாடல், விரிவுரைக்கூடம்,
மற்றும் வசதி வாய்ப்புக்களை உருவாக்குதல்.
3.
COMPUTER / PROJECTOR மற்றும் நவீன வசதிகளைக்கொண்டகற்பித்தல் முறை ஒன்றை நிறுவுதல்.
(கரும்பலகை / வெண்பலகைக் கலாச்சாரத்தை ஒழித்தல்)
4.
இதனால், பாடங்களைப் பலமுறை,
ஆசிரியர் உதவி இல்லாமலேயே, மீட்டக்கூடியதாக இருப்பதால், பின்தங்கிய மாணவர்களையும்
முன்னேற்ற உதவுதல்.
5.
மாணவர் எண்ணிக்கைக்கேற்ப PROJECTOR
மற்றும் உபகரணங்களையும் ஆசிரியர்களையும் அதிகரித்தல். அதனால், எல்லா மாணவர்களும்
பாடங்களைக் கூர்ந்து கவனிக்க வழிவகுத்தல்.
6.
துல்லியமான
ஒலிபெருக்கிகள் பொருத்தி, மாணவர் எண்ணிக்கைக்கேற்ப விரிவுபடுத்தல்.
7.
‘ஒரு பாடத்திற்கு ஒரு
ஆசிரியர்’ என்ற கலாச்சாரத்தையும் ஒழித்து, ஒவ்வொரு பாடத்திற்கும் ஆசிரியர், நடத்துனர்கள்,
வழிகாட்டிகள் கொண்ட குழுக்களை அமைத்தல்.
8.
ஒவ்வொரு பாடத்தினதும்
கற்பித்தல் படிமுறைகளை, 5 க்கும் மேற்பட்டோர் வழி நடத்துவதன்மூலம், அதி தீவிர
பயிற்சியொன்றை வழங்குதல்.
9.
எல்லா மாணவர்களும்,
மூன்று பாடங்களிலும் A A A என்று எடுக்கக்கூடியதாக பயிற்சியின் தரம், பயிற்சிமுறை என்பனவற்றை அமைத்து வழங்குதல்.
10. படிப்பித்தல், படித்தல், படிக்கவைத்தல் செயற்பாடுகளுடன், சரியான முறையில் விடை எழுதக்கூடிய பயிற்சியும் வழங்குதல்.
11. பாடங்களை நன்கு புரிந்து, உள்வாங்கியிருப்பதை உறுதி
செய்யக்கூடிய, அற்புதமான, தொடர் கணிப்பீட்டு முறை ஒன்றை உருவாக்குதல்.
12. PROJECTOR இல் பாடம்
நடாத்தும்போது, விரிவுரைக்கூடம் இருளாக இருப்பதால், அருகில் அமர்ந்திருப்பவரின்
முகம்கூடத்தெரியாது போகும். எனவே, மாணவருக்கு பாடத்தில் மட்டுமே பார்வை இருக்கும்.
பாடத்தைப் புரிந்துகொள்ளல் இலகுவாக இருக்கும். விரிவுரைக்கூடம் இருளாக இருப்பினும்,
பாடக்குறிப்புகள் எடுக்க வசதியாக, ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு TABLE LAMP பொருத்திக்கொடுத்தல்.
13. மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி A அவசியம் என்பதால், தனியாக ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு
மட்டும் அனுமதி மறுத்தல். பெளதீகம்-இரசாயனம்-உயிரியல் அல்லது பெளதீகம்-இரசாயனம்-கணிதம்
என்ற ஒரு தொகுதிக்கு என்றே மாணவர்களை அனுமதித்தல்.
14. வீட்டில் இருந்தவாறே, 24 மணிநேரமும் பாடங்களில்
உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளக்கூடியவாறு, INTERNET LESSON வசதிகள் அமைத்தல்.
15. இறுதிப் பரீட்ஷையின்போது, இரண்டு வருடங்களிலும் படித்த
பாடங்கள் நினைவிலிருக்கவேண்டும்! எனவே, 13 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு,
12 ஆம் வகுப்புக்கான பயிற்சிகளிலும் கலந்துகொள்ள இலவசமாக அனுமதிவழங்குதல்.
16. மின்சாரத் தடங்கல்களால் பாதிப்பு ஏற்படாதவாறு GENERATOR வசதி அமைத்தல்.
17. குறிப்புகள், படிவங்கள், வினாத்தாள்கள் பிரதி எடுக்க
வசதிகள் அமைத்தல்.
18. உரிய நேரத்தில் தொழுதுகொள்வதற்கு ஆண், பெண்களுக்குப்
பிரத்தியேக முஸல்லாக்கள் அமைத்தல்.
19. தண்ணீர் வசதி, கழிப்பறை வசதிகள் செய்து கொடுத்தல்.
முடிவுரை: எமது சமூக நலன் விரும்பிகளுக்கான ஒரு வேண்டுகோள்.
|
இது இலங்கையில் இதுவரை எவரும் கண்டிராத, செய்திருக்க முடியாத, அற்புதமான ஒரு கற்பித்தல் முறையாகும். இது போன்றதிட்டங்களை
நடாத்திய அனுபவம், தொழில்நுட்பம் அனைத்தயும், பெருந்தொகையான பணம் செலவுசெய்து, எமது சமூகத்தின் நலன்
கருதி இங்கே கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறோம். அல்லாஹ் நாடினால்,
31. 08. 2015 அன்று வகுப்புகள் ஆரம்பமாகும்.
எமது பயிற்சியையும் ஏனைய சட்டதிட்டங்களையும் முழுவதுமாகப் பின்பற்றிய
மாணவர்களுக்கு, AL பரீட்ஷையில்
A PASS எடுக்கதவறினால், செலுத்திய பணத்தைத் திருப்பித்தரவும்
உத்தேசித்திருக்கிறோம். எமது திட்டம் அவ்வளவு நம்பகரமானதாகும்.
அல்லாஹ் (சுப்)
உடைய திருப்திதான் எமக்கு முக்கியம். இதயசுத்தியோடு
முன்னெடுக்கும் இம்முயற்சிக்கு, சமூகப்பற்றுள்ள எல்லோரும் ஒத்துழைப்பீர்கள்
என எதிர்பார்க்கிறோம்.
رَبَّنَا
آَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ
النَّارِ
بسم الله الرحمن الرحيم
புரட்சிகரமான கற்கை நுட்பத்திற்கு,
THREE STAR POINT
Pioneers in Smart Tuition Strategy சாதுர்ய பயிற்சி வியூகத்தில் முன்னோடிகள்
|
No comments:
Post a Comment